சுவிட்சர்லாந்தில் பயங்கர விபத்து...! தீப்பற்றிய பேருந்தில் சிக்கிய 6 பேர் பலி...! - Seithipunal
Seithipunal


சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கெர்சர்ஸ் நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து  வழக்கம்போல் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் உள்ளிருந்து புகை எழத் தொடங்கியது.

சில நிமிடங்களில் அந்த புகை பெரும் தீயாக மாறி, பேருந்து முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.தீ பரவியதும் பயணிகள் பதற்றத்தில் பேருந்திலிருந்து வெளியேற முயன்றனர்.

ஆனால் தீ வேகமாக பரவியதால் சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இந்த துயரமான விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் கடுமையாக காயமடைந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrific Accident Switzerland 6 Dead After Being Trapped Burning Bus


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->