லெபனானில் போர் தீவிரம்...! தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 570 ஆக உயர்வு...! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர்ப்பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின. மேலும் மத்திய பெய்ரூட்டில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தையும் குறிவைத்து குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்களின் தொடர்ச்சியாக லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்ரூட்டில் உள்ள ஒரு ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 4 பேரும் ஈரான் தூதரக அதிகாரிகள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க, லெபனான் எல்லை அருகிலுள்ள பல இஸ்ரேல் ராணுவ முகாம்களை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பும் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

War Intensifies Lebanon Death Toll Rises to 570


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->