இனி EV கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக நெடுஞ்சாலைகளில் 498 அதிவேக சார்ஜிங் நிலையங்கள் அமைப்பு..! - Seithipunal
Seithipunal


புதுடெல்லி: நாடு முழுவதும் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 74 முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் 4,874 பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மெகா திட்டம், புதிய 'PM E-Drive' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.2,000 கோடி மானிய நிதியை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக நாடு தழுவிய உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.503 கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 74 முக்கிய வழித்தடங்களில்:

  • 50 வழித்தடங்கள் மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளுக்காக,

  • 24 வழித்தடங்கள் கனரக இ-டிரக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்காக

பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களின் நீண்ட தூரப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில், அதிவேக சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார வாகன உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ரூ.34.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மாநிலத்தின் முக்கியமான 7 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் 498 அதிவேக சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்படவுள்ளன.

சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ள முக்கிய வழித்தடங்கள்:

  • சென்னை – பெங்களூரு

  • சென்னை – திருச்சி

  • சென்னை – நாகர்கோவில்

  • சென்னை – தூத்துக்குடி

  • பெங்களூரு – கோயம்புத்தூர்

  • கோயம்புத்தூர் – திருச்சி

  • கோயம்புத்தூர் – நாகப்பட்டினம்

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார வாகன ஓட்டிகளின் 'ரேஞ்ச் அன்க்சைட்டி' (Range Anxiety) எனப்படும் சார்ஜ் பற்றாக்குறை அச்சம் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் 147 புதிய சார்ஜிங் நிலையங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைக்கப்படவுள்ளன.

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் சார்ஜிங் உள்கட்டமைப்பு விரிவடைவதன் மூலம், மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என வாகனத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் இந்த புதிய முயற்சி, இந்தியாவில் மின்சார வாகனப் புரட்சிக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for EV owners 498 fast charging stations to be set up on Tamil Nadu highways


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->