ஐரோப்பிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி: இந்தியா வர அழைப்பு..!
Prime Minister Narendra Modi held talks with European leaders
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்தியான இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும், வலிமையான மற்றும் நெருக்கமான உறவை, கொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் அமைதி, விதிகள் அடிப்படையிலான பரஸ்பர வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் அடிகோடிட்டு காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, கண்டுபிடிப்பு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை இரு தலைவர்களும் வரவேற்ற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கவும், இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார காரிடரை விரைவில் அமல்படுத்தவும் இருவரும் உறுதிபூண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் போது இந்தியா - ஐரோப்பிய யூனியன் மாநாட்டை இந்தியாவில் விரைவில் நடத்துவது குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். அத்துடன், ஆன்டோனியோ கோஸ்டா மற்றும் உர்சுலா வென் டெர் லேயன் ஆகியோர் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச விவகாரங்களில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவதன் முக்கியம் குறித்து விவாதித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Prime Minister Narendra Modi held talks with European leaders