பாலியல் பலாத்கார புகார்: 'போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து தப்பிக்கப்பார்த்தேன்: ஆம் ஆத்மி ஆட்சி எம்.எல்.ஏ., பரபரப்பு வீடியோ..! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில்  ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனுார் தொகுதி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. ஆளும் ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர். இவர் மீது ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஹர்மீத் சிங் தலைமறைவாகி பதுங்கினார்.

கடந்த 02-ஆம் தேதியன்று  அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது ஹர்மீத் சிங்கும், அவரது கூட்டாளிகளும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹர்மீத் சிங்கை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ரகசிய இடத்தில் இருந்து எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் அவர் கூறியுள்ளதாவது:

போலீஸ் துறையில் எனக்கு தெரிந்த நபர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் என்னை என்கவுன்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாக எச்சரித்ததாகவும், எட்டு எஸ்.பி.,க்கள், எட்டு டி.எஸ்.பி.,க்கள், என்கவுன்டர் நிபுணர் பிக்ராம் பிரார் மற்றும் நுாற்றுக்கணக்கான போலீசார் என்னை பிடிக்க வந்தபோது பயந்துவிட்டேன் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போலீசார் கைது செய்ய வந்தபோது, யாரையும் நான் துப்பாக்கியால் சுடவில்லை என்றும்,  அவர்களை தாக்கியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை எனவும், போலீசாரை நான் மதிக்கிறேன். ஆனால், என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AAP MLA says he tried to escape due to fear of police encounter sensational video


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->