தமிழ் ரசிகர்களை கவர்ந்த கேரளத்து சூப்பர் ஹீரோ லோகா! மொத்தம் 5 பாகம் வருகிறதாம்!
Lokah chandra chapter one kerala movie update
ஓணத்தை முன்னிட்டு வெளியான லோகா திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சூப்பர் ஹீரோ படங்களுக்குச் சவால் விடும் விதமாக, சக்திவாய்ந்த பெண்மணி கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி வேடத்தில் நடித்திருப்பது கூடுதல் ஈர்ப்பாக அமைந்தது.
படத்தை இயக்கியவர் டோமினிக் அருண். தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான், இந்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, லோகா வெறும் ஒரு படமாக அல்லாது, ஒரு யுனிவெர்ஸ் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் குறைந்தது ஐந்து பாகங்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு காரணமாக பாகங்கள் எண்ணிக்கை கூட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லோகா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த பாகங்களுக்கான கதை விவாதங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெரிய பட்ஜெட்டில், அதிக அளவிலான கதாபாத்திரங்கள், விரிவான கதைக்களம் ஆகியவை அடுத்தடுத்த பாகங்களில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
English Summary
Lokah chandra chapter one kerala movie update