ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு 03 நாட்கள் ஓண விருந்து..! - Seithipunal
Seithipunal


ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட ஓணம் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்ற நிலையில், சபரிமலை வரும் பக்தர்களுக்கு இன்று முதல் 03 நாட்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது. 

இன்று அதிகாலை 05 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று முதல் வரும் 06-ஆம் தேதி வரை 03 நாட்கள் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து வழங்கப்படுகிறது. 

அத்துடன், வரும் 07-ஆம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும், நெய்யபிஷேகமும் நடைபெறவுள்ளது. அதனையடுத்து, 07-ஆம் தேதி இரவு 09 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது.

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு நேற்று முதல் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்ற நிலையில், இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 days Onam feast for devotees visiting Sabarimala on the occasion of Onam festival


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->