லஷ்கர்-இ-தொய்பா ஆதரவாளராக இருந்து 13 ஆண்டுகள் சிறையில் இருந்த நபருக்கு, மத சுதந்திர கமிஷனுக்கான பதவி..? அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள டிரம்ப் நிர்வாகம்..! - Seithipunal
Seithipunal


லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு ஆதரவாளராக இருந்து, அதில் இணைந்து பயற்சி பெற்றுள்ள ஒருவர் அமெரிக்காவில் மத சுதந்திர கமிஷனுக்கான வெள்ளை மாளிகை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட்டுள்ளார். 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்த பயங்கரவாத அமைப்பு தான் காரணமாகும்.  2003-இல், இவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அத்துடன், அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்த புகாரின் கீழ் கடந்த 2004-ஆம் ஆண்டு, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 

அதற்கமைய 13 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் கடந்த  2017-ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்காவில் மத சுதந்திர கமிஷனுக்கான வெள்ளை மாளிகை ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. 

இவரது நியமனத்தை ஆதரித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளதாவது:- சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு அவர் வேறு பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டார் என்றும், பிரிவினைக்கு எதிராகபணியாற்றியதுடன், அமைதி முறையிலான பேச்சுவார்த்தையை ஊக்குவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், மத நம்பிக்கை புரிதலுக்கான பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதுடன், மதம் குறித்த ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்திவிட்டதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், இந்த நியமனம் நிகழ்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது நியமனம் மூலம் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Lashkar supporter gets a position in Trump administration


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->