நான் பெரிய நட்சத்திரம் அல்ல; எனக்கு பொருத்தமான, மக்கள் விரும்பும் படங்களில் நடிப்பேன்: KPY பாலா..!
I will act in films that are suitable for me and that people like KPY Bala
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு சில திரைப்படங்களிலும் காமெடியனாக நடித்துள்ளார்.
தற்போது, பாலா கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதாவது, 'ரணம் - அறம் தவறேல்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரீப்பின் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பின் போது பாலா கூறியதாவது: "நாம் முதல் அடியை எடுத்து வைக்கும் போது, நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும்; அந்த வகையில் நான் எனக்கு பொருத்தமான ஒரு படத்தை நான் செய்ய விரும்புகிறேன். நான் ஒரு சாதாரண மனிதன், பெரிய நட்சத்திரம் அல்ல.
நான் தொடர்ந்து கடினமாக உழைத்து, மக்கள் விரும்பும் படங்களில் நடிப்பேன். நல்ல படங்கள் மற்றும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று தான் நடிக்க இருக்கும் முதல் படத்தை தேர்ந்தெடுத்த விதம் மற்றும் இனி வரும் காலங்களில் அவர் எவ்வாறான படங்களில் நடிப்பார் என தெரிவித்துள்ளார்.
English Summary
I will act in films that are suitable for me and that people like KPY Bala