கரூர் நெரிசல் விவகாரம்: அந்த 'தனிநபர்' மட்டுமே காரணம் அல்ல: நடிகர் அஜித் ஓபன் டாக்..!
Actor Ajith says that individual is not the only reason for the Karur stampede
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் பேட்டி அளித்துள்ளார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது. அதற்கு அவர், கரூர் நெரிசலுக்கு அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கூட கூட்டம் வருகிறது. ஆனால், அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஏன் தியேட்டர்களில் மட்டும் நடக்கிறது..? என்றும், பிரபலங்கள், திரைக் கலைஞர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது..? இதனால் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் இது மோசமாக சித்தரிக்கிறது. ஹாலிவுட் நடிகர்கள் கூட இதையெல்லாம் விரும்புவதில்லை என்றும் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், எங்களுக்கு அந்த அன்பு தேவைதான். அதற்காகத்தான் கடுமையாக உழைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளதோடு, குடும்பத்தை விட்டு பிரிந்து, நீண்டநேரம் படப்பிடிப்பு தளங்களில் இருக்கிறோம், ஒரு படத்தை உருவாக்க காயங்களை அனுபவிக்கிறோம், மன அழுத்தம், தூக்கமில்லாத இரவுகளை கடக்கிறோம். இவை அனைத்தும் எதற்காக? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அதாவது அவை அனைத்துமே மக்களின் அன்புக்காகத்தான் என்றும், ஆனால், அந்த அன்பைக் காட்ட வேறு வழிகள் உள்ளன. ஊடகங்கள் முதல்நாள் முதல்காட்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்க கூடாது என்று நினைக்கிறேன் என்று அஜித் குமார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
English Summary
Actor Ajith says that individual is not the only reason for the Karur stampede