ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: சாப்டர் 1' ஓடிடியில் வெளியாகியுள்ளது..! - Seithipunal
Seithipunal


ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘காந்தாரா: சாப்டர் 1’.  இந்த படம் கடந்த 02-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நலன் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் இன்று முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

தமிழ் உட்பட கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா மூவியாக இந்தியா மற்றும் உலக அளவில் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் மெகா வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த படம் காட்சி படுத்தப்பட்டுள்ள திரை அரங்குகள் அரங்கம் தற்போது நிறைந்து காணப்படுகிறது.

 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவையா, பிரமோத் ஷெட்டி, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் வேட்டையை நோக்கி செல்கிறது. இதில் ரிஷப் ஷெட்டி முதல் பாகத்தை போலவே தனது இயக்கம் மற்றும் நடிப்பு திறனால் எல்லோரையும் கவர்ந்துள்ளார். அவருடன் மன்னராக வரும் குல்சன் தேவையா, ஜெயராம், ருக்மணி வசந்த் ஆகியோரும் தங்கள் நடிப்பால் ஈர்க்கின்றனர். இந்த படத்தின் ரன் டைம் 166 நிமிடங்கள் என ஓடிடி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rishabh Shetty Kandhara Chapter 1 has been released on OTT


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->