ஜிஎஸ்டி சீரமைப்பின் எதிரொலி: யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிப்பு..!
UPI money transfers increase due to GST reforms
ஜிஎஸ்டி சீரமைப்பு காரணமாக தசரா முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் யுபிஐ பரிமாற்றம் ரூ.17.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.15.1 லட்சம் கோடியாக இருந்தது என பாங்க் ஆப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''மாதம் அடிப்படையிலான கணக்கு அடிப்படையில் செப்டம்பர் மாதம் மட்டும் யுபிஐ பரிமாற்றம் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் இந்தாண்டு செப்டம்பர் மாதம் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றத்தின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்து, 1963 கோடி (எண்ணிக்கையில்) முறை நடந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.24.90 லட்சம் கோடி ஆகும். தசரா முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் டெபிட், கிரெடிட் மற்றும் யுபிஐ மூலம் 18.8 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஆகும். இதனால், பண்டிகை காலத்தில் வீட்டு உபயோக பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியதால் டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்துள்ளது.'' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
UPI money transfers increase due to GST reforms