கலவர பூமியான தான்சானியா; தேர்தல் முடிவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 700க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்..!
More than 700 feared dead in Tanzania violence over election results
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதில், வெடித்த வன்முறையில் கடந்த 03 நாட்களில் 700 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் செய்திகள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியாவில் நேற்று முன்தினம் (அக்டாபர் 29) அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபரான சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈட்டப்பட்டது.

இவ்வாறு எதிர்க்கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அங்கு வன்முறை வெடித்துள்ளது. டார் எஸ் சலாம், மவான்சா, டொடோமா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை போட்டு கொளுத்தியுள்ளனர். அவர்களை போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பவங்கள் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிருபர்கள் செய்தி சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக நடக்கும் மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதில் தர்எஸ் சலாம் பகுதியில் 350 மற்றும் மவான்சா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கலாம் கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவங்களால் தான்சானியா கலவர பூமியாகியுள்ளது.
English Summary
More than 700 feared dead in Tanzania violence over election results