பிரித்தானியா இளவரசர் அண்ட்ரூவின் 'இளவரசர்' பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்..!
Britain Prince Charles stripped Andrew of his Prince title
பிரித்தானிய மன்னர் மூன்றாவது சார்லஸ், தனது தம்பி அண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்துள்ளதால், அவர் விண்ட்சர் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் காரணமாக, அரச குடும்பத்தில் இருந்து அண்ட்ரூ விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
மன்னர் சார்லஸின் தம்பியும், மறைந்த மகாராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனுமான அண்ட்ரூ (65), கடந்த ஆண்டுகளில் தனது நடத்தை மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் காரணமாக கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார்.
இதனையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் அவர் யோர்க் டியூக் என்ற பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, மன்னர் சார்லஸ், அண்ட்ரூவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதால், இளவரசர் என்ற பட்டத்தை துறந்துள்ள அவர், 'அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சர்' என்று இனி அழைக்கப்படவுள்ளார்.

இந்த சூழலில் லண்டனுக்கு மேற்கே உள்ள விண்ட்சர் எஸ்டேட்டில் உள்ள தனது ரோயல் லொட்ஜ் மாளிகையை திருப்பி ஒப்படைக்க அண்ட்ரூவுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து முறையான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்திற்கு செல்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, பிரித்தானிய வரலாற்றில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும், அண்ட்ரூ, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும் இந்த கண்டனங்கள் அவசியமானதாகக் கருதப்படுவதாக அரண்மனை கூறியுள்ளது. கடற்படை அதிகாரியாகக் விளங்கிய அன்ட்ரூ, 1980 களின் முற்பகுதியில் ஆர்ஜென்டினாவுடனான போல்க்லாந்து போரின் போது இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார்.
இதனையடுத்து, பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் 2022 இல் அவரது இராணுவ தொடர்புகள் மற்றும் அரச ஆதரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக,1936 ஆம் ஆண்டில், விவாகரத்து பெற்ற அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக அரியணை ஏறிய ஒரு வருடத்திற்குப் பின்னர் எட்வர்ட் ஏஐஐஐ பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவர் விண்ட்சர் டியூக் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார், எனினும், பிரித்தானியாவில் அவர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Britain Prince Charles stripped Andrew of his Prince title