சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு..!
IAS and IPS conference to be held at the Chennai Secretariat postponed
முதல்வர் தலைமையில் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் மற்றும் அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன் பின் இரண்டு தரப்பினரையும் இணைத்து இந்த மாநாடு நடத்தப்படும். இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாடு வரும் நவம்பர் 05, 06-ஆம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த இரண்டு நாள் மாநாட்டில், மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து முதல்வர் விரிவான ஆய்வு மேற்கொள்வதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் நடைபெறும் தேதி, நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
IAS and IPS conference to be held at the Chennai Secretariat postponed