மிருணால் தாகூர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த மராத்தி-மலையாள கதை! ரசிகர்கள் ஆச்சரியம்! - Seithipunal
Seithipunal


படம் சூப்பர் ஹிட்டானால் அதை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவது இப்போது சாதாரண விஷயமாகி விட்டது. இதுவரை பெரும்பாலும் மலையாள படங்களே மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ஆனால் இப்போது, அதற்கு எதிராக ஒரு மராத்தி பிளாக்பஸ்டர் படம் மலையாளத்தில் வெளியாகும் என்கிற செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சாகியுள்ளது.

இந்த தகவலை நடிகை மிருணாள் தாகூர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், மராத்தி படம் மற்றொரு மொழியில் வெளிவருவது தான் பெரும் சாதனை என்று கூறியுள்ளார்.

“மராத்தி சினிமா வரலாற்றில் இதுவே முதல்முறையாக நடக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன்” எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.அந்தப் படம் ‘தசாவதார்’, மராத்தியில் வெளிவந்ததும் திரையரங்குகளில் வெடித்துப் போனது.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை சுபோத் களோல்கர் இயக்கியுள்ளார்.

பிரியதர்ஷினி இந்தல்கர் மற்றும் சித்தார்த் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்போது, அந்த மராத்தி மகா ஹிட்டான “தசாவதார்” படம் நவம்பர் 21-ம் தேதி மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mrunal Tagore shared Marathi Malayalam story social media Fans surprised


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->