மருந்தே எமனாக மாறிய கொடூரம்...! காய்ச்சலுக்கு சிரப் கொடுத்தபோது மூச்சுத்திணறி 42 நாள் குழந்தை பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


சேலம் எடப்பாடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 42 நாட்களே ஆன ஆண் குழந்தை, மருந்து அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென மூச்சுத்திணறலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட குட்டச்சிவளவு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்.

இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு கடந்த 42 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த இரண்டு நாட்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று காலை குழந்தையின் உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கையில் தாய் சித்ரா காய்ச்சலுக்கான மருந்தை அளித்துள்ளார். மருந்து கொடுத்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

42 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் திடீர் உயிரிழப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களை கதறி அழ வைத்ததுடன், அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

horror that medicine become 42 day old baby died tragically after suffocating while being given syrup fever


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->