கரூர் மண்ணில் கால் பதித்த முதலமைச்சர் விஜய்...! வழிநெடுகிலும் மக்கள் வெள்ளம்... அதிரடி வரவேற்பால் ஸ்தம்பித்தது மாவட்டம்...! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் விஜய்யின் கரூர் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ள நிலையில், சுமார் 6,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

த.வெ.க. சார்பில் கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய், இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து 9 மணியளவில் காரில் புறப்பட்டார்.

தொடர்ந்து, காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சிக்கு பயணமானார்.காலை 10.20 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து கார் மூலம் கரூருக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையில், முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு சென்ற வழியெங்கும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் சாலையோரங்களில் காத்திருந்து கையசைத்து வரவேற்றதுடன், மலர்தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவர்களுக்கு முதலமைச்சர் விஜய்யும் கையசைத்து வாழ்த்து தெரிவித்து பயணத்தை தொடர்ந்தார்.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் அட்லஸ் கலையரங்கம் மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடம் முழுவதும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஒழுங்குமுறை, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 6,500 காவலர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாதது அரசியல் வட்டாரங்களிலும், ஊடகத் துறையினரிடையிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay sets foot Karur soil People flood route district comes standstill due grand welcome


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->