தூத்துக்குடியில் அராஜகம்...! பள்ளி மாணவியிடம் அநாகரிக சைகை... தட்டிக்கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல்..! வாலிபர் போக்சோவில் கைது...!
Anarchy Thoothukudi Indecent gesture towards school girl Death threat mother who overheard her knocking Youth arrested under POCSO
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில், 10-ம் வகுப்பு மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அதனை தட்டிக்கேட்ட மாணவியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டைச் சேர்ந்த குப்பன் மகன் கதிரவன் (33), குரும்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், குரும்பூர் பஜார் வீதியில் நடந்து சென்ற 10-ம் வகுப்பு மாணவியிடம் அநாகரிகமான சைகைகள் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் தாயார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, கதிரவனின் செயலைக் கடுமையாக கண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், பொதுமக்கள் முன்னிலையில் மாணவியையும், அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதுடன், அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவியின் தாயார் குரும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கதிரவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதும், மிரட்டல் விடுத்ததும் உறுதியானதைத் தொடர்ந்து, கதிரவனை போக்சோ சட்டத்தின் கீழ் காவலர்கள் கைது செய்தனர்.
பின்னர், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Anarchy Thoothukudi Indecent gesture towards school girl Death threat mother who overheard her knocking Youth arrested under POCSO