நீட் தேர்வு மையத்தில் மின்தடை விவகாரம்: முடிவை வெளியிட உத்தரவிடப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் மாற்றியமைப்பு..!
Power outage at NEET exam center High Court reverses interim stay on release of results
தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின் தடை பிரச்னையால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அந்த தடையை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 04-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சில தேர்வு மையங்களில் ஒரு முதல் இரண்டு மணி நேரம் மின்சார விநியோகம் தடைபட்டது. அதனால்தேர்வெழுத சென்ற மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேர்வு எழுத வேண்டியிருந்ததாகவும், இது அவர்களின் செயல்திறனைப் பாதித்ததாகவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சில் மாணவி ஒருவர், இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அதனை தொடர்ந்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வரும் 15-ஆம் தேதி வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதித்தார்.
தொடர்ந்து கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘இந்தூரில் உள்ள 11 மையங்களில் மட்டுமே மின்தடை பிரச்னை இருந்தது. நாடு முழுவதும் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது தேவையற்றது’ என்று வாதிட்டார்.

குறித்த வாதத்தை நீதிபதி சுபோத் அப்யங்கர் ஏற்றுக்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட தேர்வு மையங்களைப் பற்றிய விரிவான அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் தேசிய தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இது தொடர்பான அடுத்த விசாரணை வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாற்றப்பட்ட இடைக்கால உத்தரவால், நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய 21 லட்சம் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு வழிவகுக்க கூடும். ஆனால், இந்தூரில் மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மறுதேர்வு கோரி மீண்டும் மனு செய்ய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது..
English Summary
Power outage at NEET exam center High Court reverses interim stay on release of results