கள்ளக்காதலனுடன் ஒரே வீட்டில் இருந்த தாய் - மகன் எடுத்த விபரீத முடிவு.!!
man arrested for kill mother in thirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பூல்பாண்டி-ரெஜினா தம்பதியினர். இவர்களுக்கு கொம்பையா, வினோத் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பூல்பாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்ததனால், ரெஜினா கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். இதற்கிடையே, ரெஜினாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதை அறிந்த ரெஜினாவின் உறவினர்கள் மற்றும் மூத்த மகன் கொம்பையா அவர்களைக் கண்டித்த போதிலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில், கொம்பையா நேற்று முன்தினம் பக்கத்து ஊரில் நடந்த கோவில் கொடை விழாவுக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டுக்குள் தாயார் ரெஜினாவுடன் கள்ளக்காதலன் உல்லாசமாக இருந்ததைப் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆத்திரத்தில் வீட்டுக்குள் நுழைந்ததை பார்த்த கள்ளக்காதலன் வீட்டை விட்டு வெளியே தப்பித்துச் சென்றார். இதையடுத்து கொம்பையா தாயார் ரெஜினாவைக் கண்டித்ததுடன் சைக்கிளுக்கு காற்று அடிக்க பயன்படுத்தும் இரும்பு பம்பை எடுத்து தாயாரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ரெஜினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு கொடுத்த தகவல் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெஜினாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளி கொம்பையாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
man arrested for kill mother in thirunelveli