இந்திய மக்களின் செலவில் லாபம் ஈட்டும் பிராமணர்கள் - அமேரிக்கா பரபரப்பு குற்றசாட்டு! - Seithipunal
Seithipunal


இந்தியா, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவி செய்கிறதாக குற்றம் சாட்டி, முன்னாள் அதிபர் டிரம்ப் இந்தியாவில் இருந்து வரும் சில பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருந்தார்.

ஆனால், அதனை பொருட்படுத்தாமல் இந்தியா தொடர்ந்து ரஷியாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்நிலையில், அந்த எண்ணெயை சுத்திகரித்து ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு இந்தியா விற்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம் சாட்டியுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர், "இந்தியா ரஷ்யாவின் சலவை நிலையமாக மாறியுள்ளது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கி, அதை பதப்படுத்தி அதிக விலையில் ஏற்றுமதி செய்கின்றன. இதனால் நேரடியாக உக்ரைனுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் சிலர் மக்களின் செலவில் லாபம் ஈட்டுகிறார்கள். இதை நாம் தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், "வரி செலுத்துவோராக நாம் ஏன் இந்த நிலையை பொறுக்க வேண்டும்? இந்தியா மூலம் ரஷியாவுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இது உக்ரைனியர்களின் உயிரைப் பறிக்கிறது. பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர். அவர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் நெருக்கம் கொள்வதை நான் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றும் பீட்டர் நவாரோ விமர்சித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia Crude oil tax trump USA Brahmins 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->