யோகி பாபு சீண்டிய விஜே பாவனா.. ஸ்பாட்டிலேயே மூக்குடைத்த யோகி பாபு! விஜே பாவனாவின் பேச்சால் நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
Yogi Babu angry remarks about Vj Bhavana Yogi Babu got angry on the spot! Netizens heavily criticized Vijay Bhavana remarks
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள நிலையில், அவரது “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சிறப்பாக துவங்கப்பட்டது. இதில் கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஆனால் அந்த விழாவில் தொகுப்பாளராக இருந்த விஜே பாவனாவின் ஒரு உரையாடல் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிகழ்ச்சியில் பாவனா பிரபலங்களுடன் “மைண்ட் வாய்ஸ் கேம்” என்ற சிறப்பு விளையாட்டை நடத்தினார். இதில் யோகி பாபுவிடம், “ஜெயம் ரவியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு யோகி பாபு, “என்னை வைத்து படம் எடுக்கிற ரவி மோகன் சார் நல்லா இருக்கணும் என்று தான் நினைக்கிறேன்” என பதிலளித்தார்.
ஆனால் உடனே பாவனா, “நீங்க ரொம்ப நல்லவங்க மாதிரி பேசாதீங்க… மனசுல நினைச்சதை சொல்லுங்க” என்று கூறியதால், யோகி பாபு ஒரு நிமிடம் திகைத்துவிட்டார்.
பின்னர் யோகி பாபு மீண்டும், “நான் மனசுல நினைச்சதுதான் சொன்னேன்” என பதிலளித்தார். அதற்கு பாவனா, “ரொம்ப சந்தோசம்” என கூறியும், தொடர்ந்து கிண்டல் செய்ய முற்பட்டார். இதனால் யோகி பாபு “உன்ன மாதிரி, உன் பக்கத்துல நின்னா உள்ளே விடாதீங்க, சேர் கொடுக்காதீங்கன்னு நீ சொன்னது எனக்கு தெரியும்” என பதில் அடித்தார்.
இந்த உரையாடலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.பல நெட்டிசன்கள், யோகி பாபுவை அவமதிக்கும் வகையில் பேசியதாக விஜே பாவனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.“ஒரு மேடையில் விருந்தினராக வந்த நடிகரை இப்படிப் பேசுவது மேடை நாகரீகம் அல்ல” என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.யோகி பாபுவின் அமைதியான பதில், அவருக்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவை பெற்றுத்தந்துள்ளது.
இதற்கிடையில், தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக “ப்ரோ கோட்” எனும் படத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். அடுத்து யோகி பாபுவை வைத்து திரைப்படத்தை தயாரிக்கவும் இயக்கவும் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
English Summary
Yogi Babu angry remarks about Vj Bhavana Yogi Babu got angry on the spot! Netizens heavily criticized Vijay Bhavana remarks