இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட டிரம்ப்பின் 50% வரி! வரிவிதிப்பு இல்லையென்றால் அமெரிக்கா முற்றிலுமாக அழிக்கப்படும் - டிரம்ப்
Trump 50 tariff on India Without the tariff America will be completely destroyed Trump
அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்ற டொனால்டு டிரம்ப், உலக நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி கொள்கையை அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி, மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக கூடுதலாக 25% வரி விதித்து, மொத்தமாக 50% வரியை கடந்த 27ஆம் தேதி முதல் அமல்படுத்தினார்.
இந்த நடவடிக்கை அமெரிக்க வணிக உலகில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து, நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் எடுத்த இந்த முடிவு அதிகார மீறல் எனக் குறிப்பிட்டு, அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்தனர்.
இதனை எதிர்த்து அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. “இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை” என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனிடையே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிலளித்துள்ளார். அதில் அவர்,“அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் மிகக் குறைந்துவிட்டன.பணவீக்கம் கிட்டத்தட்ட இல்லை.எரிசக்தி விலைகள் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.பெட்ரோல் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
பல ஆண்டுகளாக நம்மை பயன்படுத்திக் கொண்ட நாடுகளிலிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுள்ளோம். அவற்றால் அமெரிக்கா மீண்டும் வலிமையானதாகவும் மரியாதைக்குரியதாகவும் மாறியுள்ளது. இந்த வரிகள் இல்லாவிட்டால் நமது நாடு முற்றிலுமாக அழிந்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்புடன், டிரம்ப்பின் வரி கொள்கை பெரிய அதிர்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகள் மீண்டும் சீராகும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
English Summary
Trump 50 tariff on India Without the tariff America will be completely destroyed Trump