பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாமல் சென்ற பிரதமர் மோடி! வைரல் வீடியோ!
PM Modi Pakistan Nawaz Sharif China Xi Jinping Russia Putin
பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் பயணத்தை முடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேரடியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா – சீனா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்றதால் இது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் ஆராயப்பட்டன.
அதன் பின் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் ஓரங்கில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து உரையாடினார்.
அந்த தருணத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அங்கு இருந்தார். ஆனால், மோடி மற்றும் புதின் இருவரும் நேரடியாக உரையாடிக்கொண்டே சென்றனர். நவாஸ் ஷெரீப்பை முற்றிலும் கவனிக்காமல் அவர்கள் நகர்ந்தது, சர்வதேச ஊடகங்கள் மற்றும் இணையத்தில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், இந்தியா-ரஷியா உறவுகள் மேலும் வலுப்பெறும் சூழலில் பாகிஸ்தானுக்கு வெளிப்படையான சைகையாகக் கருதப்படுகிறது.
English Summary
PM Modi Pakistan Nawaz Sharif China Xi Jinping Russia Putin