முன் எப்போதுமில்லாத அளவுக்கு Gst வசூல்!ஆகஸ்டு மாத GST எத்தனை லட்சம் கோடி வசூல் தெரியுமா?
GST collection at an unprecedented level Do you know how many lakh crores of GST collection was collected in August
நாட்டின் முக்கிய வரி அமைப்பாக விளங்கும் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு மறைமுக வரிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வரி முறையாக கொண்டு வரப்பட்டது. நேற்றுடன் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தது 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.
மத்திய அரசின் தரவுகளின்படி, ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. மே மாதத்தில் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி வசூலாகியது.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. அதனை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “நாட்டின் உள்நாட்டு சந்தை விரிவடைதலும், வணிகம் மற்றும் உற்பத்தி துறைகள் மீள வளர்ச்சி அடைவதும், வரி கட்டமைப்பில் கடுமையான கண்காணிப்பும், ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிக்க காரணமாக உள்ளன” என தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், வருங்கால மாதங்களிலும் ஜி.எஸ்.டி. வசூல் 2 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
GST collection at an unprecedented level Do you know how many lakh crores of GST collection was collected in August