ஆன்மா சாந்தியடையட்டும்! சாத்தான்குளம் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்...!
May soul rest in peace Premalatha Vijayakanth expressed condolences over Sathankulam accident
ஆம்னி வேன் ஒன்று, தூத்துக்குடி சாத்தான்குளத்தில் சாலை ஓரம் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் ''பிரேமலா விஜயகாந்த்'' கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரேமலா விஜயகாந்த்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளமலக்ஷ்மினை ஆலய திருவிழாவிற்கு கோவையில் இருந்து சென்றபோது விபத்துக்கு உள்ளாகி கெர்சோம் மோசஸ், B கோயில் பிச்சை, ஸ்டாலின் (குழந்தை), வசந்தா ஜெனிபர் எஸ்தர், சைனி கிருபாகரன், ஆகியோர் வரும் வழியில் பாபநாசம் அணையில் குளித்துவிட்டு கருங்குளம் வழி வரும் பொழுது பேய்குளம் அருகிலுள்ள 7 பேருடன் கிணற்றுக்குள் ஆம் கோஸ் பாய்ந்து சென்றதில் இருவர் மட்டும் நீத்தி வெளியே வந்து இருக்கின்றனர்.
குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது. அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.சாத்தான்குளம் விபத்துக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அளித்துள்ளது குறிப்பிப்பிடத்தக்கது.
English Summary
May soul rest in peace Premalatha Vijayakanth expressed condolences over Sathankulam accident