கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கொடூரம்: மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தரையில் படுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், குழந்தைகள் தரையில் மெத்தையுடன் படுத்தபட்டிருப்பதும், வார்டுகளில் உள்ள படுக்கைகள் கடும் பழுதான நிலையில் காணப்படுவதும் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடையே சமூக வலைதளங்களில் அதிருப்தியும் பரவியுள்ளது.

இந்தக் காணொளிக்கு பதிலளித்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி கூறியதாவது: "அந்த பகுதியில் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே தற்காலிகமாக வைத்திருந்த மெத்தைகளை இரண்டு பெண்கள் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிறகு, பழுதான மெத்தைகள் உடனடியாக அகற்றப்பட்டன. தற்போது மருத்துவமனையில் தேவையான அளவில் மெத்தைகள் உள்ளன; நோயாளிகளுக்கு தேவையில்லாத இடையூறு ஏதும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Kallakuruchi Govt Medical College Hospital


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->