அந்த சிசிடிவி காட்சி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - கொந்தளிக்கும் அண்ணாமலை!
bjp annamalai kummudipoondy girl harassment cctv
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சிறுமி என்றும் பாராமல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இது போன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இத்தனை தைரியமாக, சாலையில் நடந்து செல்லும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றவாளி, இதற்கு முன்பாக எத்தனை முறை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பான் என்ற கேள்வி எழுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, மேலும் குற்றங்களில் அவன் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது.
காவல்துறை இனியும் தாமதிக்காமல், உடனடியாக இந்தக் குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
English Summary
bjp annamalai kummudipoondy girl harassment cctv