கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் வீசிய மருத்துவர் யார்? எந்த கட்சி? பின்னணி என்ன?!
karunanithi statue paint Dr arrest
சேலம் நான்கு சாலை பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிலை கடந்த ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை, சிலையின் வலப்பக்கம் மற்றும் அதன் பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது பொதுமக்கள் கவனத்தில் வந்தது. தகவல் அறிந்த திமுக மாநகரச் செயலாளர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அருகிலிருந்த சிசிடிவி வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதில், வயதான ஒருவர், ஒரு குச்சியில் துணி கட்டி பெயின்டை எடுத்து சிலை மீது பூசுவது தெளிவாக பதிவாகி இருந்தது. மேலும், சம்பவத்திற்கு முந்தைய மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.
பதிவுகளின் அடிப்படையில், குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மருத்துவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவரது செயலுக்கு பின்னான நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அவர் எந்த அரசியல் கட்சியை சேர்த்தவர் என்றும், எந்த அரசியல் பின்புலமும் அவருக்கு இல்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவருக்கு வயது 72 என்பதால் அவரை போலீசார் ஜாமினில் விடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
karunanithi statue paint Dr arrest