ரிலீசுக்கு முன்பே லாபத்தை வாரி குவிக்கும் காந்தாரா சாப்டர் 1..!!
Gandhara Chapter 1 movie collection before release
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படம் 'காந்தாரா'. இந்தப் படம் கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள நிலையில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை பெற்று வரும் நிலையில், காந்தாரா சாப்டர் 1 படம் ரிலீசுக்கு முன்பே லாபத்தை அள்ளி வருகிறது. அதாவது, ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் சார்ட்டிலைட் உரிமையை ஜி நெட்வொர்க் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு தியேட்டர் உரிமை ரூ.35 கோடிக்கும், தெலுங்கு தியேட்டர் உரிமை 95 கோடிக்கும் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த படத்தின் ஒடிடி உரிமை ரூ.125 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Gandhara Chapter 1 movie collection before release