வருத்தமளிக்கிறது.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்...!
PM Modi condoles the deaths of those trapped in the Karur stampede
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர், 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
'தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன். 'என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi condoles the deaths of those trapped in the Karur stampede