குலதெய்வ கோவிலில் மகன்களுடன் வழிபாடு செய்த தனுஷ்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள 'இட்லி கடை' திரைப்படம் வருகிற 1-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தனுசுடன், நித்யாமேனன், ராஜ்கிரண், அருண் விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ் இந்தப் படம் தனது வாழ்நாளில் சந்தித்த பிரச்சனைகளை வைத்து எடுத்ததாக தெரிவித்திருந்தார். மேலும் ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று காலை பிரத்தியேகமான கேரவன் மூலம் நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா, மகன்கள் லிங்கா, யாத்ரா மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டத்தில் போடி அருகே உள்ள சங்கராபுரத்தில் தனது குலதெய்வ கோவிலான கருப்பசாமியை வழிபட வந்தார்.

அதன் பிறகு தனது பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றார். தொடர்ந்து அதிகாலை நேரத்தில் பாதுகாவலர்களுடன் கேரவனில் வந்து வழிபாடு செய்த தனுஷ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அவரது வருகை குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். அவர்களுக்கு கையசைத்தபடியே தனுஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor dhanush pray in kuladeivam temple


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->