நகைச்சுவை நடிகர்'திரு.நாகேஷ் அவர்கள் பிறந்ததினம்!.
Comedy actor Mr Nageshs birthday
நகைச்சுவை நடிகர்'திரு.நாகேஷ் அவர்கள் பிறந்ததினம்!.
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர், நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்த பெருமைக்குரியவருமான நாகேஷ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்தார்.
இவர் 1959ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் புகுந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். அது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
1974ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. இவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி மறைந்தார்.

தமிழ்நாட்டின் இதழியல் முன்னோடி, தினத்தந்தி தமிழ் நாளிதழைத் தொடங்கிய 'தமிழர் தந்தை: திரு.சி.பா.ஆதித்தனார் அவர்கள் பிறந்ததினம்!.
சி. பா. ஆதித்தனார் (1905 செப்டம்பர் 27, 1981மே 24) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
English Summary
Comedy actor Mr Nageshs birthday