நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தேவை: திமுகவை விடாமல் துரத்தும் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டின் கடன் சுமையை வரலாறு காணாத அளவிற்கு ஏற்றிவிட்டு, இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, வெற்று விளம்பரங்கள் மூலம் தமிழ் நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,தமிழக மக்களை தொடர்ந்து கடனாளியாக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசுக்கு கண்டனம்?

தமிழ் நாட்டின் கடன் சுமையை வரலாறு காணாத அளவிற்கு ஏற்றிவிட்டு, இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, வெற்று விளம்பரங்கள் மூலம் தமிழ் நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றி வரும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, 

 2021-ல் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன்சுமையை குறைக்கவும் ஆலோசனை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு அளித்த பரிந்துரை என்ன? 

கடந்த 5 மாதங்களில் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய, திமுக அரசு மேலும் மேலும் கடன் வாங்கி, தமிழ் நாட்டை ‘கடன்கார மாநிலம்’ என்ற படுகுழியில் தள்ளியுள்ளது.

விடியா திமுக அரசு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 37,082 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், மூலதனச் செலவாக வெறும் ரூ. 9,899 கோடி மட்டும் செலவிட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ. 27 ஆயிரம் கோடி வருவாய் செலவினத்திற்கே செலவிட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களிலேயே வருவாய் பற்றாக்குறை 25,686 கோடி ரூபாயை எட்டிவிட்டது. மீதமுள்ள 7 மாதங்களில் மொத்த வருவாய் பற்றாக்குறை சுமார் 60 ஆயிரம் கோடியை தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவிற்காக 57,271 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று இலக்கு நிர்ணயித்த நிலையில், இதுவரை மூலதனச் செலவாக வெறும் 9,899 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாதங்களில், மழைக் காலம், அதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூலதனச் செலவிற்கு நிர்ணயிக்கப்பட்ட மீதமுள்ள தொகையான சுமார் ரூ. 47,000 கோடி இலக்கை இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு எப்படி எட்டும் என்பது ஒரு கேள்விக்குறியே.


இந்நிலையில் கடன் வாங்கி கார் பந்தயம் போன்ற ஆடம்பரச் செலவுகள், நினைவு மண்டபம் போன்ற வெட்டிச் செலவுகள், அரசு நிதியில் மட்டுமல்லாமல், ஊராட்சி நிதியிலும் வீண் விளம்பரச் செலவுகள் செய்து தமிழ்நாட்டை இந்த முதல்-அமைச்சர் கடனில் மூழ்கடித்துள்ளார்.

இவ்வாறு அரசு, கடன் மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ் நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்று தமிழ் நாட்டின் அனைத்து வாரியங்கள், கழகங்கள் மூலமும் 4 ஆண்டுகளில் அதிக அளவு கடனை வாங்கி தமிழகத்தை திவாலாக்கும் கடைசி படியில் நிற்க வைத்ததுதான் இந்த விடியா திமுக பெயிலியர் மாடல் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் சாதனை. நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது துவக்கப்பட்டு, 80 சதவீதம் வரை நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, வேண்டும் என்றே மூன்றாண்டுகளுக்குமேல் இழுத்தடித்து, தாங்கள் கொண்டு வந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டி திறந்த மோசடி நாடகம்தான் நடந்ததே தவிர, இந்த அரசு மக்களுக்காக எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை.நிதி நிலை பற்றியும், வாங்கியுள்ள கடன் தொகை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பது பற்றியும் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

White paper needed on financial status Edappadi Palaniswami chases without sparing DMK


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->