ட்ரம்பை வயதானவர் என்று கேலி செய்துள்ள ஒபாமா..? தீயாய் பரவும் தகவல்..! - Seithipunal
Seithipunal


உலகின் 80% பிரச்சினைக்கு முக்கிய காரணம் முதியவர்கள் தான் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அதாவது, டிரம்பை ஒபாமா கேலி செய்திருப்பார் என அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பராக் ஒபாமா இவ்வாறு கூறியது 77 வயதான அதிபர் டொனால்டு டிரம்பைக் குறை கூறும் விதமாக பரவலாகக் கருதப்பட்டு வருகிறது. ஒபாமா அளித்த பேட்டி ஒன்றில், 'அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதியவர்களால் தான் உலகில் 80 சதவீதம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அத்துடன், அவர்கள் தங்கள் சாவுக்கு பயப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முக்கியத்துவம் இல்லாமல் போவதை எண்ணி அவர்கள்  அஞ்சுவதாகவும், அதனால் தான் அவர்கள் எதையும் விட்டு விடத் தயாராக இல்லை. அவர்கள் எல்லாவற்றிலும், தங்கள் பெயரை எழுதி வைப்பதாகவும், அச்ச உணர்ச்சி அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டிலும் ஒரு முறை இதேபோல் ஒபாமா பேசியுள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 'பாராசிட்டமால்' மருந்து சாப்பிட்டால், குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்று சில நாட்களுக்கு டிரம்ப் கூறியிருந்தார்.

அது குறித்து, கருத்து தெரிவித்த ஒபாமா, ''இத்தகைய கருத்துக்கள், பொது சுகாதாரத்தையும், கர்ப்பிணியாக இருக்கும் பெண்களையும், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோரை பதற்றம் அடையச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வயதான தலைவர்களை கடுமையாக சாடி, ஒபாமா பேசி இருப்பது அமெரிக்க அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. 64 வயதான பராக் ஒபாமா, அமெரிக்காவில் 2008 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Obama says 80 percentage of the worlds problems are caused by the elderly


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->