108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை.. இறுதிக்கட்டத்தை எட்டும் பணிகள்!  - Seithipunal
Seithipunal


ராமேசுவரத்தில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.மீதம் உள்ள பணிகளை இன்னும் 4 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் தரிசித்து செல்கின்றனர்.அகில இந்திய அளவில் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் விளங்கி வருகிறது. ராமேசுவரம் தலத்துடன் ஆஞ்சநேயருக்கு முக்கிய புராண தொடர்பு உள்ளது என்று வரலாறு கூறுகிறது.

இதனால் ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் வடமாநிலத்தில் உள்ள ஒரு அமைப்பு சார்பில் ரூ.100 கோடியில், 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இதற்காக உயரமான பீடம் அமைக்கப்பட்டு அதில் ஆஞ்சநேயரின் கம்பீரமான உருவ சிலை கட்டப்பட்டு வருகிறது தற்போது அங்கு காணமுடிகிறது .அதுமட்டுமல்லாமல்  பாதத்தில் இருந்து கழுத்து வரையிலான சிலைப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. மீதம் உள்ள பணிகளை இன்னும் 4 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிலை கட்டுமான நிர்வாகி ஒருவர் கூறும்போது, “வடமாநிலத்தை சேர்ந்த அறக்கட்டளை மூலம் இந்தியாவில் 4 இடங்களில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் சிம்லா ஆகிய 2 இடங்களில் ஆஞ்சநேயர் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார் .மேலும்  தற்போது ராமேசுவரத்தில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன என்று கூறிய அவர்  இனி அசாமிலும் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட உள்ளது” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

108 foot tall Hanuman statue work reaching the final stage


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->