அதிரடி! 100 நாட்கள், வெளி உலகமின்றி, அதிரடி சவால்கள்! - பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் பட்டியல் வெளியானது - Seithipunal
Seithipunal


தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் தனது 9 -வது சீசனுடன் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகியுள்ளது. இதில் வருகிற அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ள இந்த சீசன், வழக்கம்போலவே 100 நாட்கள், வெளி உலக தொடர்பின்றி, ஒரே வீட்டில், சவாலான பணிகள், கடும் போட்டி-இவையனைத்தையும் கொண்டிருக்கும்.

மேலும், மக்கள் வாக்குகளின் ஆதரவுடன் இறுதி வரை நிற்கும் ஒருவர் மட்டுமே, பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசையும் கைப்பற்றுவார்.இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் ஆகியோர் வெற்றியாளர்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

இதனிடையே, ஓவியாவின் பிரபலம், கவின்–லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் அதிரடி வெளியேற்றம், தாடி பாலாஜியின் சர்ச்சைகள் போன்றவை பிக்பாஸ் வீட்டின் மறக்க முடியாத தருணங்களாக திகழ்கின்றன.இதில் முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி பொறுப்பேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, பிக்பாஸ் சீசன் 9-ஐயும் விஜய் சேதுபதி தானே தொகுத்து வழங்கவுள்ளார்.இதற்கிடையில், இந்த சீசனில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் நடிகர் சித்து, ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ஃபரினா ஆசாத், சீரியல் நடிகை ஜனனி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக, ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்த பாடினி (அனிதா) மற்றும் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த ரோஷன் ஆகியோரும் பிக்பாஸ் 9-இல் கலக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

100 days without outside world action packed challenges Bigg Boss 9 contestants list released


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->