திரு.எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்கள் நினைவு தினம்!.
Mr S R Ranganathan Memorial Day
'இந்திய நூலக அறிவியலின் தந்தை' திரு.எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்கள் நினைவு தினம்!.
இந்திய நூலக அறிவியலின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் (S.R.Ranganathan, சீர்காழி இரா. அரங்கநாதன்) ஆகஸ்ட் 12 ஆம் தேதி 1892 ஆண்டு பிறந்தார்.
சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் (S. R. Ranganathan, ஆகஸ்ட் 12, 1892 - செப்டம்பர் 27, 1972) இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்;
இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் பெயர் பெற்றவர். நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. இவரது பிறந்த நாளை, இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் பட்டதாரி திருமதி.காமினி ராய் அவர்கள் நினைவு தினம்!.
வங்க மொழிக் கவிஞரும் சீர்திருத்தவாதியுமான காமினி ராய் (Kamini Roy, அக்டோபர் 12, 1864 - செப்டம்பர் 27, 1933)
பெண்களுக்கான வாக்குரிமைக்கான போராட்டத்தின் முன்னணி பிரச்சாரகராக இருந்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் பள்ளிக்குச் சென்ற முதல் சிறுமிகளில் ஒருவரான ராய், பிரிக்கப்படாத வங்காளத்தின் பேக்கர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள பசண்டா கிராமத்தில் பிறந்தார். 1886 ஆம் ஆண்டில் ராய் இளங்கலைப் பட்டம் பெற்றார். பெத்துன் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.
இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்பதால் உடனடியாக அங்கு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ராய் அபாலா போஸைப் பின்பற்றி பெண்களின் உரிமை ஆர்வலராக மாறினார். மேலும் வங்காளத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் அடிப்படை உரிமையை உறுதி செய்வதற்காக வீரியத்துடன் பிரச்சாரம் செய்தார். 1929 ஆம் ஆண்டில், கொல்கத்தா பல்கலைக்கழகம் வங்க இலக்கியத்திற்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மதிப்புமிக்க ஜகதாரினி தங்கப்பதக்கத்தை அவருக்கு வழங்கியது.
English Summary
Mr S R Ranganathan Memorial Day