குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்..தண்ணீர் ஆர்ப்பரிப்பு கொட்டுவதால் உற்சாகம்!
Tourists flocking to Courtallam Falls excitement as the water cascades down
இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வருகை புரிந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் , மத்திய மியான்மார் கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது .
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதுடன் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வருகை புரிந்தனர். வார இறுதி விடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து, லேசான வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
English Summary
Tourists flocking to Courtallam Falls excitement as the water cascades down