'கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி வேதனையளிக்கிறது': ரஜினிகாந்த் வேதனை..!
Rajinikanth expresses grief over the loss of innocent lives in Karur
தவெக தலைவர் விஜய் கரூரில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Rajinikanth expresses grief over the loss of innocent lives in Karur