இன்று மாலை 6:00 மணிக்கு நினைவேந்தல்...! த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் கடிதம்
Memorial service today at 6 PM Letter from TVK General Secretary N Anand
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி இன்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவு கூறும் விதமாக இன்று மாலை 6 மணி அளவில் தங்கள் மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் தினம் அனுசரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட வேண்டிய கோஷங்களும் கட்சித் தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.இதற்கு த.வெ.க தொண்டர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.
English Summary
Memorial service today at 6 PM Letter from TVK General Secretary N Anand