11 ஆண்டுகள் கழித்து...! சன்சத் ரத்னா விருது தமிழ்நாட்டிற்கு...!
After 11 years Sansad Ratna Award for Tamil Nadu
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரைக்கு, பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக ''சன்சத் ரத்னா'' தேசிய விருது வழங்கப்படுகிறது.

இதில் தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர்.
இந்நிகழ்வு டெல்லியில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் குறிப்பிடத்தக்க விதமாக, 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இதனால் C.N.அண்ணாதுரைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
English Summary
After 11 years Sansad Ratna Award for Tamil Nadu