சென்னை புழல் சிறையில் அதிர்ச்சி: காவலரை தாக்கிய நைஜீரிய பெண் குற்றவாளி..!
Nigerian woman convict assaults guard in Chennai Puzhal jail
சென்னை புழல் சிறையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த மோனிகா என்ற பெண் குற்றவழக்கில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று சிறையில் வீடியோ கான்பிரென்சிங் இல்லை எனக்கூறி சிறை காவலர் சரஸ்வதியிடம் அவர் வாக்குவாதம் செய்துள்ளார்.
இருவருக்குமிடையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறை காவலர் சரஸ்வதியை கைதி மோனிகா தாக்கியுள்ளார். இதில் காவலர் சரஸ்வதி காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை சக காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புழல் சிறையில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Nigerian woman convict assaults guard in Chennai Puzhal jail