அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டாவது பச்சிளம் குழந்தை பலி!
rat bite government hospital in Indore Madhya Pradesh
மத்தியப் பிரதேசம், இந்தூர் மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில், எலி கடித்து படுகாயமடைந்த இரண்டாவது பச்சிளம் குழந்தையும் உயிரிழந்துள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரவுகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளையும் எலி கடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். செப்டம்பர் 2 காலை, ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து, மற்றொரு குழந்தையும் செப்டம்பர் 3 மதியம் 1 மணியளவில் உயிரிழந்தது.
சமீபத்தில் உயிரிழந்த குழந்தை பிறந்து 3–4 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை என அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, மத்தியப் பிரதேச துணை முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சருமான ராஜேந்திர சுக்லா, சம்பவத்திற்கான காரணங்களை ஆராய உயர்நிலை அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
English Summary
rat bite government hospital in Indore Madhya Pradesh