இந்திய பயணத்தை நிறைவு செய்துவிட்டு புறப்பட்டார் ரஷ்ய அதிபர்...!
Russian President left after completing his visit to India
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் அதிகாரப்பூர்வ இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு தாய்நாடு திரும்பினார். புதன்கிழமை டெல்லி விமான நிலையத்தில் கால்வைத்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அன்புடன் வரவேற்றார்.
அதன் பின்னர், தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர் இந்தியாவில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

நேற்று நடைபெற்ற 23-வது இந்தியா–ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பல்வேறு துறைகளை வளப்படுத்தும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மாநாட்டைத் தொடர்ந்து, மோடி-புதின் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து இருநாடுகளின் உறவு மேலும் வலுப்பட்டதாக தெரிவித்தனர்.இந்திய பயணத்தை வெற்றிகரமாக முடித்த புதின், நேற்று இரவு சிறப்பு விமானத்தில் ரஷ்யாவுக்கு புறப்பட்டார்.
அவரை விமான நிலையம் வரை வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மரியாதையுடன் வழியனுப்பினார்.
English Summary
Russian President left after completing his visit to India