காமராஜர் அவமதிப்புக்கு எதிராக தூத்துக்குடியில் கொந்தளித்த காங்கிரஸ் கட்சியினர்...! யூட்டூப்பரின் உருவம் தீயிட்டு கடும் கண்டம்...!
Congress party members protest Thoothukudi against insult Kamaraj YouTubers image set on fire strong condemnation
பெருந்தலைவர் காமராஜரை அவமதிக்கும் வகையில் “மை இந்தியா” யூடியூப் சேனலில் பேசப்பட்ட சர்ச்சைக் கருத்துக்கு எதிராக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அமைப்பு தீவிர கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொந்தளித்தது.
மேலும், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் சண்முகம் ஆவேச கண்டன உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சியினர் கூட்டமாக திரண்டு, முக்தார் அகமது மீது கடும் கோபம் வெளிப்படுத்தி, அவரது உருவப் படத்தை தீயிட்டு எரித்து கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும் அவர் மீது வன்முறையைத் தூண்டும் சட்டப் பிரிவுகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் ராஜன், செந்தூர்பாண்டி, சேகர், ஐசன் சில்வா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அதோடு, ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு செயலாளர் முத்துமணி, கலை இலக்கியப் பிரிவு தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்பினர்.
English Summary
Congress party members protest Thoothukudi against insult Kamaraj YouTubers image set on fire strong condemnation