மனிதாபிமான பேரழிவு! 3 நாட்களில் 4,400 உயிர்கள் பலி...! - சூடானில் கொடூர உள்நாட்டுப் போர் தீவிரம் - Seithipunal
Seithipunal


கடந்த 2023ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடான சூடான் முழுவதையும் அதிரவைத்த வகையில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் வெடித்தது.

நாட்டின் அரசியல் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற ஆதிக்கப் போட்டியே இந்த ரத்தக் கலவரத்தின் மூல காரணமாக மாறியது.மேலும், ராணுவ தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான Sudan Armed Forces செயல்பட்டு வர, மறுபுறம் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான Rapid Support Forces எனப்படும் விரைவு அதிரடிப் படைகள் களமிறங்கின.

இதன் ஆரம்பத்தில் இருதரப்பும் இணைந்து ஆட்சியை பிடித்திருந்தாலும், துணை ராணுவத்தை அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை முறிந்ததன் பின்னர் மோதல் தீவிரமடைந்தது.

இதன் பின்னணியில் டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரை கைப்பற்றும் நோக்கில் ஆர்.எஸ்.எப். படைகள் கடந்த அக்டோபரில் கொடூர தாக்குதலை முன்னெடுத்தன. அக்டோபர் 25 முதல் 27 வரை மூன்று நாட்களிலேயே 4,400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் நகருக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர் தப்ப முயன்ற குழந்தைகள் உட்பட 1,600 பேரை எல்லைப்பகுதியில் எந்திரத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.ஒரே வார காலத்திலேயே 6,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களை குறிவைத்து திட்டமிட்ட பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்றை சிறைச்சாலையாக மாற்றி ஆயிரக்கணக்கானோரை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக வோல்கர் டர்க் தெரிவித்தார்.

இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அதேசமயம், சுமார் 1 கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

மொத்தத்தில், சூடான் இன்று மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் தள்ளப்பட்டு, ரத்தமும் கண்ணீரும் கலந்த ஒரு துயரக் கதையாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Humanitarian disaster 4400 lives lost 3 days Brutal civil war intensifies Sudan


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->