ஆந்திராவில் மூடுபனியில் சிக்கிய பில் கேட்ஸ் ஜெட்...! - வானில் 30 நிமிடம் வட்டமிட்ட பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


Microsoft நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் சமூக நலத் திட்டங்களை நேரில் ஆய்வு செய்ய இன்று வருகை தந்தார். குறிப்பாக ‘சஞ்சீவானி’ மருத்துவ சேவை உள்ளிட்ட முக்கிய மக்கள் நலப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, அமராவதி நகரில் மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து, சுகாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதற்காக சிறப்பு தனியார் ஜெட் விமானத்தில் இன்று அதிகாலை அவர் விஜயவாடா சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால், காலை நேரத்தில் விஜயவாடா மற்றும் சுற்றுப்புறங்களில் அடர்ந்த மூடுபனி நிலவியதால் ஓடுபாதை தெளிவாகக் காணப்படவில்லை.

இதனால் விமான இயக்கங்களுக்கான தெரிவுநிலை மிகவும் குறைந்தது.மேலும், விமானம் தரையிறங்கத் தேவையான சிக்னல்கள் கிடைக்காத காரணத்தால், பில்கேட்ஸின் ஜெட் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் சுற்றி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதன் பின்னர் பனி மெதுவாக விலகி, வானிலை சீரானதும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.அதன்பின், அதிகாரிகள் அவரை வரவேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

இந்த எதிர்பாராத தாமதம் காரணமாக இன்று காலை விமான நிலையம் முழுவதும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bill Gates jet caught fog Andhra Pradesh circling sky 30 minutes


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->