மின்னணு சேவை தடைக்கு பின் மீண்டும் செயல்பாட்டில் Chennai One ...! - MTC பயணிகளுக்கு மீண்டும் ஆன்லைன் வசதி
Chennai One back operation after electronic service ban Online facility restored MTC passengers
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கும் நகரப் பேருந்துகளில் மின்னணு டிக்கெட் வழங்கும் சேவை, மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த கோளாறு முழுமையாக சரிசெய்யப்படும் வரையிலும், நடத்துனர்கள் மூலம் காகித அடிப்படையிலான கைமுறை பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் இந்நேரத்தில் ஏற்கப்படமாட்டாது எனவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பயணிகளுக்கு சற்றே நிம்மதி தரும் வகையில், Chennai One செயலி வழக்கம்போல் செயல்பட்டு வருவதாக MTC விளக்கம் அளித்துள்ளது.
அதன்மூலம் பயணச்சீட்டுகளை எந்த தடையும் இன்றி முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி,தற்காலிக சிரமம் இருந்தாலும், மாற்று ஏற்பாடுகளுடன் சேவை தொடரும் என கழகம் தெரிவித்துள்ளது.
English Summary
Chennai One back operation after electronic service ban Online facility restored MTC passengers